வாழ்க்கை

11 October 2018
அவளோர் அழகி அற்புத அழகி
அதைவிட என்பது எதுவுமிலாத
அதிசய அழகி
அதையவள் அறிவாள் அறியாதவள்போல்
அகத்தில் ரசிப்பாள் அழகாய் நடிப்பாள்
அம்மோய் மினுக்கி!
06 July 2018

ஜனனமும் மரணமும்
ஒவ்வொரு கணமும் எத்தனை உயிர்கள்
உதித்து விழிக்கின்றன!
ஒவ்வொரு கணமும் எத்தனை உயிர்கள்
உதிர்ந்து விழுகின்றன!

06 July 2018

வீரனை இழந்தாய் பாரத மாதா! உன்
விதிதான் எனக்கு விளங்கவே இல்லை
யாரெவர் என்றொரு பார்வை இலாதவன்
யமனாய்ச் செயல்படல் எத்தனை நாளோ!

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.