காதல்

×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 45

19 February 2015

வண்ணமொன்று ராகமாக வளைய வந்தது, வெற்று
வார்த்தைநல்ல வாசகமாய் வானம் தொட்டது
வற்றிப்போன வேய்ங்குழலில் முத்தம் நேர்ந்தது, ராதை
வந்ததனால் வாய்த்தராகம் வசந்தமானது

18 February 2015

அல்லல்களை எள்ளுமொரு சிரிப்பு, என்னைத்
தள்ளிவரும் என்கவிதை விரிப்பு, நான்
சொல்லச் சொல்லக் கூடுமொரு வனப்பு, நெஞ்சைச்
சொட்டச்சொட்ட நனைக்குமோர் நினைப்பு, நான்
ஆதிசிவன் கையில்பேசும் நெருப்பு! என்
ஆட்டம்பாட்டம் யாவுமவன் பொறுப்பு!

18 February 2015

கல்லெறியுங்கள் அந்தக்
கவிஞனின் மீது!
காத்திருப்பது இன்பமாமே!!

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.