பொது

22 November 2018

நாட்கள் நகர்கின்றன
ஞாபகங்கள் கண்முன்பு
நாற்று, மரமாவதுபோல்
நாள்தோறும் வளர்கின்றன
பாட்டன் நினைவானான்
பலரின்னும் சொல்லாவார்
பக்கத்தில் நீ நிசமாய்ப்
பரிவோடு நிற்பதென்ன!!

15 November 2018
என் மனம் ஏனோ கனக்கிறது, அதற்கு
ஏதோ காரணம் இருக்கிறது
எல்லோர் கதையும் புரிகிறது, ஆனால்
என் கதையை எதோ மறைக்கிறது
09 November 2018
அன்பு மரியாதை நம்பிக்கை நன்றியெல்லாம்
ஒன்றிலிருந் தொன்றெழுந் தோங்குவதாம் – ஒன்றில்லை
என்றாலும் மற்றெல்லாம் இற்றுவிடும்; இவ்வுண்மை
நன்றறிந்து வாழ்ந்தால் நலம்

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.