பொது

12 October 2018

விண் தாண்டி விரைகிறது நெஞ்சின் வேகம்
விரல்கூட மடங்காமல் தளரும் தேகம்
கண்பொங்கும் கருணைக்கும் கனலின் தாகம்
காசினிக்குப் புரியாது கவிதைச் சோகம்

13 September 2018

படைப்பின் முழுமுதல் கணபதி, அவனைப்
பாரில் தந்தவள் குணவதி
விடையில் திரிபவன் அவள்பதி, அந்த
வீர வேலவன் கிரிபதி
அடைந்தும் கரையா தவர்முன், இமை
அசையா திருப்பவன் குருபதி*
குடும்பம் இதுவே நம்கதி, இதில்
கும்மாளம்தான் சங்கதி!

03 September 2018
இப்படிச் செல்வதா அப்படிச் செல்வதா
எப்படிச் செல்வது எனப்புரியாமல், ஒரு
திரிபுர விழிப்பில் திகைத்தன வாத்துகள்
தெருவில் கிடைத்ததைத் தின்ன முயன்றன

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.