இன்று பிரதோஷம் - 02.02.2019

02 February 2019
(இன்று பிரதோஷம் )
நெஞ்சில் நிறைவே சிவம்
நினையா மனமே சிவம்
அஞ்செழுத்துமே ஆதி சிவம் 
அமைதியின் ஆட்சி சிவம் 
 
மயிலைக் காபாலி அரனை
மனம்நி னைப்பதே தவம்
கயிலை மர்மத்தை இங்கே
கண்முன் காண்பதே சுகம்
 
எதுவும் எதுவும் சிவம் 
எல்லை இலாதது சிவம்
மதுமயங்கிடும் மலரடியில்
மனம்கி டப்பதே தவம்
 
அவன்
நினைப்பு வந்ததே வரம், அது
நிலைத்திருப்பதே தவம்
புனைவில் வாராது சிவம், அதைப்
புனைந்து மாளாது சுகம்!
 
2.2.19/சனிக்கிழமை/17.48/வாணியம்பாடி - சென்னை ரயிலில
Read 243 times
More in this category:

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.