கட்டுரைகள் - பொது

அபிராமி அந்தாதி - உரை விளக்கம் நிறைவு நாள் நிகழ்ச்சி

01 September 2018
வணக்கம்.
 
அடியேன் வேண்டுகோளை ஏற்று அபிராமி அந்தாதி முழுமைக்கும் ஓர் அற்புத விளக்கவுரை வழங்கினார் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள். 
 
வந்து கேட்டவர்கள் பேறு பெற்றவர்கள்!
 
எட்டு நாள் விளக்கவுரையை உலகெங்கிலும் உள்ள அன்பர்கள் காணும்படிப் பதிவு செய்து உடனுக்குடன் வலையேற்றிய, நிகழ்ச்சிக்கு இடம்தந்து உதவிய ஆர்கே கன்வென்ஷன் சென்டரின் உரிமையாளர் திரு. ராமகிருஷ்ணன் அனைவருடைய நன்றிக்கும் உரியவர். அவருடைய அரங்கமே அருட்சுரங்கம்.
 
மனமார உதவிசெய்து இதை வெற்றிகரமாக நடத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
 
அமிழ்தப் பொழிவாய் அபிராமி அந்தாதியை
அள்ளி வழங்கினார் அன்பர் முத்தையா
சிமிழுள் கடலைச் சித்தர்போல் அடைத்தார்
சிறிது சிறிதாய்ச் சித்தத்தில் புகட்டினார்
 
காதணி கழற்றிக் ககனம் எறிந்தது
கட்டி நிலவாய்க் கனல்குளிர்ந் தொளிர்ந்ததில்
நாதப் படகினில் நம்மெல்லோரையும்
நன்கு நடத்தினார் நற்கரை ஏற்றினார்
மீத மிருக்கும் பதிகங்களையும், அவர்
மிழற்ற அன்னையே மீண்டும் அருள்கவே
ஆதி அந்தமே அந்தாதியெனும்
ஆழ்ந்த பொருளை அறிந்தது மனமே!
 
எட்டு நிகழ்வுகள் எட்டும் நிலவுகள்
ஏறிய களிச்சுழல் இறங்காப் பேறுகள்
எட்ட முடியாத எம்பிராட்டியைச்
சுட்ட முடியாத சொல்லையே எடுத்து
கிட்ட நிறுத்திக் கிறுகிறுக்கவே
வைத்த முத்தையா வாழ்க வாழ்கவே!
 
அன்புடன்,
ரமணன்
01.09.2018 / சனிக்கிழமை / காலை 6.47
 
Read 906 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.