ஜாகேஷ்வரிலிருந்து 83 கிலோ மீட்டர் தொலைவில், நைனிதால் மாவட்டத்தில் உள்ளது கைஞ்சி தாம் என்கிற இடம். இவ்விடமும் காத்கோடம் போகும் வழியிலேயே உள்ளது. இங்கே பாபா ஸ்ரீ நீம் கரோரி மஹராஜ் என்பவரின் ஆசிரமமும் அவர் நிர்மாணித்த ஹனுமான் கோவிலும் உள்ளன.

தேவதாரு மரங்கள் சூழ்ந்திருக்கும் மலைச் சரிவுகள், பள்ளத்தாக்குகள்; ஓடிக்கொண்டிருக்கும் ஜடகங்காவின் லேசான சலசல சத்தம்; ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் சிறிய வீடுகள்; கனமான விரகுக் கட்டைகளைக் கட்டிச்சுமந்து, சுமையைக் காட்டிக்கொள்ளாமல் சுகமானப் புன்னகையை மட்டும் காட்டி நம்மைக் கடந்து செல்லும் பெண்கள்

கோவிலில் நடுநாயகமாக உயர்ந்து நிற்கும் அந்தத் தேவதாரு மரத்தில் தானாகவே பால் சுரக்குமாம். அந்தப் பாலைக்கொண்டுதான் அந்த மரத்தின் அடியில் அருவமாக இருக்கும் இறைவனுக்கு அபிஷேகம் நடத்திக் கொண்டிருந்தனர் அப்பகுதி வனவாசி மக்கள். ‘செய்ம்’ அல்லது ‘செம்’ என்றால் ‘சுயம்பு’ என்று அர்த்தம். 

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.