எனது குருநாதர்

×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 45

குருமொழிகள்

குரு மொழி - 1

அமைதிதான் மகிழ்ச்சி. மகிழ்ச்சி, அமைதியன்று. மனநிறைவே அமைதியின் தறுவாய். நிறைவு என்பது எல்லாம் நிறைய இருப்பதால் வருவதில்லை! நம்மிடம் என்ன இருந்தாலும் இல்லாமற் போனாலும் திருப்தியாய் இருப்பதற்குப் பெயர்தான் மனநிறைவு. ‘அப்பாடா! எனக்குப் போதுமான துன்பங்கள் இருக்கின்றன!’ என்று சொல்லி உங்களையே பார்த்து நீங்கள் உரக்கச் சிரித்துக்கொள்ள வேண்டும்

 

குருமொழி - 2

”வாழ்க்கை என்பது நில்லாமல், ஓயாமல் மாறிக்கொண்டே விரைந்துகொண்டே இருக்கும் சூழ்நிலைகளே, நிகழ்வுகளே. நம் குழந்தைப் பருவம், இளமை, முதுமை, இவையெல்லாம் வெறும் சூழ்நிலைகளே. நலமும், நோயும் கூட அப்படித்தான்; செல்வமும், வறுமையும் அவ்வளவே. இன்னும் சொல்லப்போனால், நம் ஜனனம் என்பது ஒரு நிகழ்வுதானே? எனவே, மரணம் என்பதும் மாறிப்போகிற, ஓடிப்போகிற இன்னொரு வெறும் சம்பவம்; சூழ்நிலை அவ்வளவுதான்.”!”

”இன்னொரு விதமாக வாழ்க்கையை விளக்கலாம். உறவுகள்! ஆம், வாழ்க்கை என்பது உறவுகளேயன்றி வேறில்லை. உறவுகள் யாரோடு? எவற்றோடு? மனிதர்கள், பொருட்கள், சூழ்நிலைகள், கருத்துக்கள்! எவரிடத்தும், எதனிடத்தும், அளவான தொலைவில் இருப்பதே வாழ்க்கையில் அமைதி பெறுவதற்கான உபாயம். கவனி! மனிதர்கள் தொலைவைத்தான் காட்டுகிறார்கள்! அந்தத் தொலைவை நிர்வகிப்பது உன் கையில்தான் உள்ளது!”

”உன்னுடய ஒரே துணை, உறவு நானே. மற்றெல்லாம் தொடர்புகளே”

 

குருமொழி - 3

இன்றைய குருமொழியை, நேற்றிரவு தன் உடலைவிட்டு அவருக்கே உரிய கம்பீரத்தோடும், கண்ணியத்தோடும் நீங்கிய ஜெயகாந்தனுக்கு அர்ப்பணிக்கிறேன். தமிழ் இலக்கிய உலகில், அவர் நடந்த சிங்க நடையும், காட்டிய சீற்றமும், செய்த கர்ஜனையும் கேட்டுக்கொண்டேதான் இருக்கும். அவரை நான் சந்தித்திருக்கிறேன் என்பதையும், அவருடைய தாக்கம் எனக்கு உண்டு என்பதையும் நான் எனக்குக் கிடைத்த பேறாகக் கருதுகிறேன்.

”மரணம் என்னும் நிகழ்வுக்கு அணுக்கம் மிகவதிகம். தொலைவோ மிகவும் குறைவு.”

”மரணம் மிகவும் வேதனையானது. முழுமையாக வளர்ந்த ஒரு செடியை வேரோடு பிடுங்குவதைப் போன்றது.”

”வாழுதல் என்பது வெறுமே உயிரோடிருப்பது அல்ல. உயிர்விசைப்புடன் இயங்குதலே வாழுதல் என்பது.”

ஒவ்வொரு கணமும் உணர்வுபூர்வமாக, உயிரிவிசைப்புடன் வாழ்ந்தார் ஜெயகாந்தன். எனவே, மரணத்தால் அவருடைய கம்பீரத்தை மாசுபடுத்த முடியாது.

 

குருமொழி - 4

”சித்தத்தில் அமைதி. மனம் முழுதும் மகிழ்ச்சி. தேகம் ஓய்வில். இதுதான் உனக்கான என் குறிப்பு. தேகம் இளைப்பாறி இருக்கவேண்டும் என்றால் கல்லைப்போல் கிடக்கவேண்டும் என்பதல்ல. உடம்பு அசையும்போது, மனம் பரபரக்க வேண்டியதில்லை.”

மன அமைதி என்பது முரண் தொடை – சூடான ஐஸ்க்ரீம், குளுமையான சென்னை போல! ஏனெனில், சாந்தி என்பது ஆன்மாவின் நிலை. அதனால்தான், மன அமைதி பற்றிய கொழுத்த புத்தகங்களால் எந்த அமைதியும் விளைவதில்லை. பேச்சை முடிக்கும்போது, இந்த ரத்தினத்தை எனக்குத் தந்தார், வழக்கம்போல் பல்குத்திக்கொண்டே!

“ஆன்மாவிலிருந்து எழும் அமைதி, சித்தம் என்னும் திரையில் தன்னைப் பிரதிபலித்துக்கொள்ளும் போது, மனம் அதனை மகிழ்ச்சி என்றே புரிந்து கொள்கிறது.”

 

குருமொழி - 5

கடவுள் எல்லோருக்கும் -- மனிதர்கள், தேவர்கள், அரக்கர்கள், பற்பல உயிரினங்கள் -- சமதொலைவில்தான் இருக்கிறார்

கடவுள் என்பது பரம சத்தியம்; அசைவே இல்லாதது. அவருக்கு எதுகுறித்தும் எந்தக் கருத்தும் கிடையாது. அழைக்காத வரையில் அவர் ஏனென்று கேட்பதில்லை.

கடவுள் என்பவர் உன் தோலைக் காட்டிலும் உனக்கு நெருக்கமாக இருப்பவர்

எல்லோருக்கும் கடவுள் சொந்தம் என்பது மட்டுமல்ல. ஒவ்வொருவருக்கும் கடவுள் முழுக்க முழுக்க சொந்தமாக இருக்கிறார்.

 

குருமொழி - 6

"வாழ்க்கை என்னும் கோப்பை உன் முன் இருக்கிறது. அது விளிம்புவரை நிரம்பித் ததும்பியிருக்கிறது. மெல்ல ஏந்திக்கொள். மெதுவாய் உறிஞ்சிக்கொள். முழுவதையும் அருந்திக்கொள்!"

 

குருமொழி - 7

"கண்விழித்தால், நாட்டின் மேன்மையைக் கருதிச் செயல்படு. கண்களை மூடினால் கடவுளில் ஆழ்ந்திரு. ஊரோடு ஒத்து வாழ். உள்ளே, அவனில் அவனாய் இரு!"

"பாரத நாட்டை தேவியாகக் கருதி, அந்த நினைப்போடே எவன் அவளை மும்முறை வலம் வருகின்றானோ, அவன் வேறு எந்த ஆன்மிக சாதனையும் செய்ய வேண்டியதில்லை. அவன் நேரே முக்தி அடைகிறான்."

"இந்தியாவின் எதிர்காலம், அதன் கடந்த காலத்தில்தான் உள்ளது.அண்மைக் கடந்த காலம் அல்ல! பண்டைய பழைய காலம்!"

 

குருமொழி - 8

குரு என்பவர் யார்?
"குரு என்பவர் ஓர் ஆளில்லை. அவர் ஒரு தத்துவம், நல்ல எண்ணங்களின் கொத்து, மிகப் பெரியவர், வானம் போல். மிகவும் கனமானவர், வெட்டவெளி போல். ஆம், அவர் ஒன்றுமே இல்லை. ஒருபோதும் அவர் தேகமில்லை."

அவருக்கு எல்லாம் தெரியுமா?
"இதோ இந்த மின்விசிறி எப்படி வேலை செய்கிறது என்பது கூட அவருக்கு தெரியாமலிருக்கலாம். ஒழுங்காக ஒரு வாக்கியம் கூடச் சொல்லத் தெரியாதவராயிருக்கலாம். இருப்பினும், அவர்

 

Read 1338 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.