ஊடகம்

×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 45

எங்கே அந்தப் பொன்னாடு?


சொன்னசொல் தவறினால் இன்னல்கள் நேரும்
குடும்பத்தைப் பழிசூழ்ந்து குலம்நாச மாகும்
என்றுதான் மனிதர்கள் இருந்தார்கள் இங்கே
என்றோ அல்ல சிலகாலம் முன்னே

பிராணாயாமம் எதற்கு?

மலர்தூவும் போதும் மறை ஓதும்போதும்
மலர்த்தாள் தனைத்தான் நினைக்கின்ற போதும்
மழைநிற்பதைப்போல் சுடர்நிற்பதைப்போல்
மனம்நிற்க வேண்டும்! மனம்நிற்க வேண்டின்

சாதம் பிரசாதம்

அள்ளிக் கொடுத்தால் அதுசாதம்
அளவாய்த் தந்தால் பிரசாதம்
கிள்ளிக் கொடுப்பதும் தவறில்லை
கீழே அமர்த்தி இலைபோட்டு
வெள்ளிச் சோறும் ரசம் மோரும்
வியஞ்சனத் தோடும் படைத்திடலாம்
உள்ளம் நிறைப்பது பிரசாதம்
உதரம் நிறைப்பது தான்சாதம்!

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.