ஊடகம்

×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 45

சங்கரா தொலைக்காட்சி - காஞ்சி மகான் - பிப்ரவரி 22, 2017

Media

எங்கே அந்தப் பொன்னாடு?


சொன்னசொல் தவறினால் இன்னல்கள் நேரும்
குடும்பத்தைப் பழிசூழ்ந்து குலம்நாச மாகும்
என்றுதான் மனிதர்கள் இருந்தார்கள் இங்கே
என்றோ அல்ல சிலகாலம் முன்னே
இன்றந்த சத்தியம் என்பதே போச்சு
எல்லாமே சில்லரை என்றாகிப் போச்சு
தன்னலம் என்பதே நம்வாழ்வின் மூச்சு
தத்துவம் பண்பெலாம் வீணான பேச்சு!

கல்வி இல்லாதவன் கையிலே ஓட்டு
கட்டிடம் தகரவே வைத்தார்கள் வேட்டு
சொல்லவே கூசுதே கையிலே நோட்டு
கொள்ளவே அலைகிறார் நாதொங்கப் போட்டு
இல்லாரெலா மெச்சில் பிச்சையாய் ஆக
இழிவான குழியிலே தேசமும் வீழ
வல்லார்க ளும்பார்த்து நிற்கிறார் சும்மா
வார்த்தையே இல்லையே வலிக்குதே அம்மா!

சொன்னசொல் தவறாத சத்தியம் எங்கே?
ஊர்வாழத் தான்வாழ்ந்த உத்தமம் எங்கே?
என்னதான் ஆனாலும் எளிமையே ஏற்றம்
என்றுமுன் னோர்வாழ்ந்த பக்குவம் எங்கே?
அன்றெமது திருநாடு ஆனந்தக் கூடு
இன்றிந்தத் திருக்கோயில் ஆசையின் காடு
என்றிந்த நிலைமாறும் வழியொன்று தேடு
திருநாடு மாறவே பாடுபடு பாடு!

Read 956 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.