பாடல்கள்

02 September 2018
(இப்போது பிறந்த பாடல். இன்னும் பாடிப் பழகவில்லை. இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள என்ன தயக்கம் எனக்கு?)
 
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
கண்ணன் பிறந்தான், நாங்கள்
காணக்காண கண்ணின் முன்னே
கண்ணன் வளர்ந்தான்
25 August 2018

இவனே அவன்
அவனே இவன்
சிவனே சண்முகன்

விந்தைமிகும்
தந்தை சுதன்
அவனே அவன் மகன்

சிவனே சண்முகன்
அவனே அவன் மகன்

உலகெங்கும் திரிந்து வந்தேன்
ஓயா ஆசையினாலே
விலகாமல் முருகன் வந்தான்
நிழலாய் என் பின்னாலே

24 January 2018
(அதிகாலை சுமார் மூன்றரை மணி. ஓர் அற்புதக் காட்சி. ஆ! இன்றைக்கு வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை! புரிகிறது)
 
பட்டுப் பாவாடை கட்டி
பளபளன்னு சொக்கா போட்டு
வட்டப்பொட் டொண்ணு வச்சு
நட்சத்ரம் சலங்கை கட்டி
வளவி குலுங்க வந்தாளே மவராசி! 

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.