பாடல்கள்

கால்நடக்கப் பாலமில்லே கையிலே காசுமில்லே

27 May 2017

Media

கால்நடக்கப் பாலமில்லே
கையிலே காசுமில்லே
கரையே தெரியவில்லே
கண்ணீரும் கொறையவில்லே
காலடியில் கரையுதப்பா காலம், அதுவும்
கண்ணீரி லேயலங் கோலம்
சூல்புகுந்து வந்த கதை
சுத்தமாப் புரியவில்லே
குடிவந்த ஒலகத்துல
சத்தம்தவிர ஒண்ணுமில்லே
பால்மணக்கும் சிரிப்போடே
பழைய பரம சிவன் போலே
கோலெடுத்து ஒடத்திலே
கொண்டுசேத்தான் கரை மேலே!

பாடாம பாடவச்சான் பாட்டு! அதைப்
பாத்துத் தலையசைச்சான் கேட்டு!
வந்தவழி சொந்தவழி
வந்தவுடன் மறந்தவழி
எந்தவழி இந்தவழி
என்றுதகிக்கும் நொந்தவழி
அந்தநேரம் வந்துநின்னு
அவன் நடந்து போட்டவழி
அந்தவழி அந்த வழி
தந்தைதந்த சொந்த வழி
சொல்லாம சொல்லித்தந்தான் பாடம், அவன்
சொன்னபடிதான் நகரும் ஓடம்!


25.05.17 / வியாழன் / காலை 10.05

Read 1109 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.