பாடல்கள்

அறியப் படாதது காலம், சில அலைகளே கடலினில் பாலம்

27 May 2017

Media

”அறியப்படாத அனைத்துள்ளும், அறவே அறியப்படாதது காலம்.” அரிஸ்டாடில்.
அறியப் படாதது காலம், சில
அலைகளே கடலினில் பாலம், அந்த
அலைகளின் மறுபெயர் நேரம், அது
நேர்ந்தால் நிழலும் தூரம்

தானாய் இருந்தும் வானாய் விரிந்தும்
காணா திருந்தும் கண்முன் இருந்தும்
மாறுதல் இல்லாத மெளனம் காலம், அந்த
மெளனத்தின் மழலை நேரம்! (அறியப் படாதது)

நாளும் இரவும் நாம்செய்த தொல்லை
ஜனனமும் மரணமும் காலத்தில் இல்லை
தோளில் கற்பனைச் சுமைகள் ஏனோ?
தொட்டுவிட்டால் பின்னர் வானும் வானோ? (அறியப் படாதது)

காலடியில் கரையும் மணல் நேரம்
கரையா திருக்கும் கடலே காலம்
தூலமென்னும் கரையைத் துணிவுடன் நீங்கு
காளியின் மடியினில் காற்று வாங்கு! (அறியப்படாதது)

Read 1128 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.