பாடல்கள்

நீ கவிதையிலே வரும் நியாயமா?

27 May 2017

Media

நீ
கவிதையிலே வரும் நியாயமா?
கண்ணில் படாதொரு ஜாலமா?
கடவுளின் பார்வையில் தூலமா?
கரைகள் இணைக்காத பாலமா?
சொல்லேன் நீ யார்? காலமா?
உன்போல் யாரிங்கே? வானமா?

ஏதோ தூரம் ஏனோ நேரம்
ஒவ்வொரு நொடியும் பாரம்
காதல் கானம் கவிதை மோனம்
கலைவது தானா யாவும்? இவை
மீதம் இலாமல் தீருமா? அதை
மீண்டும் சொல்வதும் நேருமா? இந்தப்
பாதை பயணம் முடிவெல்லாம், கரம்
பறிக்கும் மலர்போல் ஆகுமா? அவன்
பதத்தில் ஒன்றேனும் சேருமா? (நீ)

காலம் என்பதும் கோலம் என்றால்
மூலம் அதற்கும் உண்டன்றோ?
தூலத்தில் இருந்து வானம் பழக
துணைசெய் வதுதான் நேரமன்றோ?
காலமும் நேரமும் கண்களன்றோ! அந்தக்
கண்ணில் தெரிவதே கடவுளன்றோ!
ஞாலம் வாழ்க்கை ஆயிரம் சேர்க்கை
யாவும் காலத்தின் வசமன்றோ!
காணும் வரை காலம் நிசமன்றோ! (நீ)


16.05.17 / செவ்வாய் / மதியம் 12.36

Read 1219 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.