புத்தகங்கள்

bookwrapper/isai_sundar_small_1468506548.jpg
Gallery

இசையை ரசிக்கலாம் வாருங்கள்

புத்தகங்கள்

இசையை ரசிக்கலாம் வாருங்கள்

தமிழாக்கம்:   திரு. இசைக்கவி ரமணன்

நம்முடைய சிறந்த செல்வமான இசையைப் பற்றிய அறிவும் உணர்வும் அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். உங்கள் கைகளில் தவழ்கின்ற இந்தப் புத்தகம், அந்த விருப்பத்தின் விளைவே! 

விலை: 80/-

bookwrapper/deviyummanithanum-small_1468503929.jpg
Gallery

தேவியும் மனிதனும்

புத்தகங்கள்

தேவியும் மனிதனும்

ஆசிரியர்:   திரு. த.வே. அனந்தராமசேஷன்

பன்னெடுங்காலமாக நமது பாரத நாட்டில் நிலவிவரும் தச மஹா வித்யையின் விளக்கத்தைச் சிறிய அளவில், செறிவாகத் தந்திருக்கிறார் திரு. த.வே. அனந்தராமசேஷன் அவர்கள். தனது 87ஆம் வயதில், அவர் நமக்காக இந்த நூலை எழுதியுள்ளார். பராசக்தியின் பக்தர்களுக்கு இந்த நூல் தேவியின் வரமே. 

  விலை:  70/-

bookwrapper/nathiyil_malar_small_1468484144.jpg
Gallery

நதியில் விழுந்த மலர்

புத்தகங்கள்

நதியில் விழுந்த மலர்

ஞானத்தில் வைகறை யோகக் கலவி. எதுவும் அப்பட்டமாக இல்லாமல் எல்லாம் ஏற்கனவே தெரிந்ததுபோல் தோன்றவைக்கும் அதீத நிலை. அதை மீண்டும் மீண்டும் சொல்ல முயன்று, தோற்றுத் தோற்று, மீண்டும் மீண்டும் சொல்ல முயன்று தோற்றுக்கொண்டே இருக்கும் தொய்வற்ற தோல்வியின் தோரணங்களே இந்த கவிதைகள்.

விலை: 70/-

bookwrapper/agathiyar-anthathi_small_1468502774.jpg
Gallery

அகத்தியர் அந்தாதி

புத்தகங்கள்

அகத்தியர் அந்தாதி

அகத்தியர் அந்தாதி 100 வெண்பாக்கள் கொண்டது. நூல் முழுதும் அகத்தியர் குருவாக நிற்கிறார். சீடனின் ஏற்ற இறக்கங்கள் பாடல்களில் தெரிகின்றன. ஓர் ஆன்மீக அப்பியாசியின் மனநிலைகளை மட்டுமே இந்த வெண்பாக்களில் காணலாம். யோகமும் தமிழும் குலவும் அழகையும் ரசிக்கலாம். 

bookwrapper/imayam_small_1468493345.jpg
Gallery

இமயம் அந்தரங்கத்தின் பகிரங்கம்

புத்தகங்கள்

இமயம் அந்தரங்கத்தின் பகிரங்கம்

”இமயத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை தோன்றினால் அங்கிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று புரிந்துகொள்” என்றோர் பழைய வாசகம் இருக்கிறது. சிந்தித்து பார்த்தால் புரிகிறது. வினாக்குறியோடு தான் விதையும் முளைக்கிறது. 

bookwrapper/manonmani_malai_small_1468492212.jpg
Gallery

மனோன்மணி மாலை

புத்தகங்கள்

மனோன்மணி மாலை

மதுரை திருக்கோவிலில் சொக்கநாதர் கருவறையில், சிவனின் இடப்புறம் வீற்றிருக்கிறாள் மனோன்மணி. 1987ல் விளைந்தது இந்த மனோன்மணி மாலை. 100 வெண்பாக்கள் கொண்ட அந்தாதி. அறவே மறந்து போனேன்! இருபது வருடங்கள் கழித்து எதேச்சையாக மீண்டும் என் கண்ணில் பட்டது. 

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.